Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன் ஆதரவு பேரணி மீதான  நேரடி  ஒளிபரப்பை முடக்குவதா? META [மேட்டா] விளக்கம்  அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன் ஆதரவு பேரணி மீதான நேரடி ஒளிபரப்பை முடக்குவதா? META [மேட்டா] விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 05-

கோலாலம்பூர் , புக்கிட் ஜாலீல் AXIATA ARENA அரங்கில் நேற்றிரவு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற பாலஸ்தீன் ஆதரவு பேரணியின் நேரடி ஒளிபரப்பை முடக்கியிருக்கும் '' மெட்டா'' அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் பாமி பிடிசில் உத்தரவிட்டுள்ளார் .

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட தனித்துவமான , மலேசிய மக்களின் இந்த ஆதரவு பேரணியின் நேரடி ஒளிபரப்பை மெட்டா முடக்கியிருப்பது , ஏமாற்றம் அளிக்கிறது என்று அரசாங்கப் பேச்சாளரான பாமி பிடிசில் தெரிவித்தார் மெட்டா வின் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என்று பேரணி முடிவடைந்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாமி பிடிசில் இதனை குறிப்பிட்டார்

அண்மையில் ஹமாஸ் அரசியல் பிளிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனிஎஹ் படுகொலை தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் கண்டன பதிவுகள் , இஸ்மாயில் ஹனிஎஹ் -வுடன் பிரதமர் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட இதர கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலிருந்து மெட்டா அகற்றியது மூலம் அது பெரும் கண்டன கணைகளுக்கு இலக்காகியது . இது போன்ற சம்பவம் பாலஸ்தீன் ஆதரவு பேரணியின் போது , நிகழாது என்று மெட்டா உயர் அதிகாரிகள் தம்மிடம் உத்தரவாதம் அளித்தப் பின்னரும் இது நடந்திருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்

மெட்டா என்று சுருங்க அழைக்கப்படும் META PLATFORM INCORPORATION என்பது அமெரிக்காவை தளமாக கொண்டு பாஸ் புக் இன்ஸ்டாகிராம் ,வாட்ஸாப்ப் , மற்றும் தரேட்ஸ் முதலிய சேவைகளை வழங்கி வரும் தொடர்த் துறை நிறுவனமாகும் .

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான பாலஸ்தீன ஆதரவு பேரணியின் நேரடி ஒளிபரப்பை முடக்கியிருப்பது மூலம் அதன் உள்ளூர் பிரநிதிகள் , தன்மை உடனடியாக சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமி பிடிசில் கேட்டுக்கொண்டார்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை