Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

Share:

பேராக் மாநிலம் தஞ்சோங் மாலிம் பகுதியில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமான UPSI-இல், பவுலிங் மையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை அதிகாலை 1.57 மணியளவில் தகவல் கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் பேராக் மாநில கிளை துணை இயக்குநர் சபரோட்சி நோர் அகமது தெரிவித்துள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 10 நிமிடங்களில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 53 வயதான முகமது ராட்ஸி அரிஃபின் என்ற அந்த ஆண் ஊழியர், பந்துவீச்சு மையத்தின் சுத்தம் செய்யும் உபகரணங்கள் வைக்கப்படும் அறைக்குள் சுயநினைவின்றி காணப்பட்டார்.

இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையானது இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிறைவடைந்ததாகவும், இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News