பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறார்கள் பற்றி தகவல் தெரிந்திருந்தும் , அது குறித்து புகார் அளிக்க தவறும் தனிநபர்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை துடைத்தொழிப்பதற்கு நடப்பில் உள்ள இச்சட்டத்தை மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதாக அசாலினா ஓத்மான் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.








