குறைந்தப்பட்ச சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் அடுத்த மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறைந்தப் பட்ச சம்பளத் திட்டத்தின் அமலாக்கம் பல சிரமங்களுக்கு இடையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொதுச் சேவைத்துறை ஊழியர்களின் நடப்பு சம்பளம் திருப்தியளிக்காத நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்ட அன்வார், சாமானிய மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு சில தரப்பினர் தங்களின் சுய நலத்திற்கு நாட்டின் வளங்களைச் சுரண்டிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
தற்போது ஒற்றுமை அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் போது வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான தாக்கத்தை உணர முடிவதாக குறிப்பிட்டார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


