சுங்கைப்பட்டாணியில் உள்ள பிரபல பேரங்காடி ஒன்றில் விடுமுறையைக் கழிக்கத் திரண்ட அந்நிய நாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட 'ஒப்ஸ் குதிப்' சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் கெடா மாநில குடிநுழைவுத் துறை நடத்திய இந்த அதிரடி சோதனையில், மொத்தம் 127 அந்நிய நாட்டினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற போதிலும், பேரங்காடியைச் சுற்றிலும் நிலைகொண்டிருந்த அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
சோதனைக்குள்ளான 127 பேரில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 21 பேர் மட்டும் ‘959 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில குடிநுழைவுத் துறைத் தலைவர் முகமாட் ரிட்சுவான் பின் முகமாட் ஜென் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் இப்பேரங்காடியில் அந்நிய நாட்டினர் அதிக அளவில் கூடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.












