கேமரன் மலை, ஆகஸ்ட்.30-
பேரா, தாப்பபாவிருந்து செல்லும் கேமரன் மலை சாலையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்து கொண்டு சாய்ந்ததில் தம்பதியர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் நிகழ்ந்தது. கேமரன் மலை – ரிங்லெட் சாலையின் 26 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இது தொடர்பாக மாலை 5.08 மணிக்குத் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
சொற்பக் காயங்களுக்கு ஆளானவர்கள், அந்நிய நாட்டவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது. அத்தம்பதியர், காரில் சென்று கொண்டு இருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கனத்த மழைக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தம்பதியர், பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர்.
சாலையில் விழுந்து கிடந்த மரத்தையும், மண்ணையும் அகற்ற, பொதுப்பணி இலாகாவின் துணையுடன் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.








