ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-
இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில், வடிகால் அடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில், மனநல மருத்துவம் மற்றும் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவு இருந்த கட்டிடத் தொகுதியான பங்குனான் லிலியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது என்றும், சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் அது தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் கிங் தியான் சூன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.








