Aug 4, 2026
Thisaigal NewsYouTube
மாமியாரை அடித்து காயப்படுத்தியதாக மகன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாமியாரை அடித்து காயப்படுத்தியதாக மகன் மீது குற்றச்சாட்டு

Share:

தமது மாமியாரை கன்னத்தில் அறைந்து காயப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது பி. ஹேம்மாந்த் என்ற அந்த நபர், இக்குற்றத்தை கடந்த ஜுன் 25 ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் கோலாலம்பூர், பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு வீட்டில் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இச்சம்பவத்தில் அந்த நபரின் 63 வயது மாமியார் கன்னத்தில் கடும் காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News