Jul 29, 2026
Thisaigal NewsYouTube
29 ஆயிரம் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவிக் கரம்
தற்போதைய செய்திகள்

29 ஆயிரம் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவிக் கரம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

மடானி அரசாங்கத்தின் கீழ் அதிகமான இந்திய தொழில்முனைவர்கள் தொடர்ந்து உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தொழிமுனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ R. ரமணம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேசிய நிதியகமான தெக்கூன், இந்திய தொழில்முனைவர்களுக்கு உதவும் நோக்கில் SPUMI ( ஸ்பூமி ) எனப்படும் இந்திய சமுதாய தொழில்முனைவர்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி உதவியை வழங்கி வருவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

கடந்த மே 31 ஆம் தேதி வரை தகுதி பெற்ற 29 ஆயிரத்து 136 இந்திய தொழில்முனைவர்களுக்கு மொத்தம் 48 கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்புள்ள உதவித் திட்டத்தை ஸ்பூமி பதிவு செய்துள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

இந்த எண்ணிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மே 31 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் உள்ள 835 இந்திய தொழில்முனைவர்களுக்கு ஒரு கோடியே 79 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

தொழிமுனைவர்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராக தாம் தலைமையேற்றப் பின்னர் இநத் நிதி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

தவிர இந்திய மகளிர்களை வளப்படுத்தும் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான நிதி உதவித் திட்டத்தையும் தாம் மேம்படுத்தி வருவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்