Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தொப்புள் கொடியுடன் சிசு கண்டு பிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொப்புள் கொடியுடன் சிசு கண்டு பிடிப்பு

டிச.5-

சுபாங், Puchong Permai- யில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் படிக்கட்டில் ஒரு பெரிய கைப்பையில் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத ஆண் குழந்தை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

உயிருடன் காணப்பட்ட அந்த ஆண்குழந்தை கைப்பைக்குள் கிடத்தப்பட்டு, பத்தாவது மாடியில் உள்ள படிக்கட்டு ஓரத்தில் கைவிடப்பட்டுக் கிடந்தது, நேற்று மாலை 4.30 மணியளவில் பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

அக்குழந்தை தற்போது செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள வேளையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →