Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மகாதீருக்கு எதிராக போலீஸ் துறையிடம் மகஜர்
தற்போதைய செய்திகள்

மகாதீருக்கு எதிராக போலீஸ் துறையிடம் மகஜர்

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு எதிராக நாளை ஜனவரி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் 50- க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் ஆதரவோடு, திட்டமிட்டப்படி கோலாலம்பூர் செந்தூல் மாவட்ட காவல் நிலையத்தில் பரிந்துரை புகார் ஒன்று வழங்கப்படும் என்று மலேசியத் தமிழர் தன்மானப் பேரியக்கத்தின் தலை வரும், பிரபல ஊடகவியளாருமான முனைவர் பெரு.அ. தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

“இந்தியர்களையும் சீனர்களையும் இந்நாட்டுக்கு விசுவாசமற்றவர்கள்" என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்ற ஒரு முன்னாள் பிரதமரான துன் மகாதீர், அண்மையில் பிரபலமான இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்த நேர்காணலில், .குறிப்பாக "இந்திய சமூகத்தை நாட்டுக்கு விசுவாசம் அற்றவர்கள் என்று குறிப்பிட்டதோடு,' மலேசியர்களாகவும்,அவர்களைக் கருதவும்- ஏற்கவும் கூட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் குறிப்பிடும் காரணம்- "இந்தியர்கள், மலாய்க்காரர்களாக இன்னும் தங்களை மாற்றிக் கொள்ள வில்லையென்றும், இன்னும் அவர்கள் தாய்மொழியிலேயே வீடுகளில் பேசி வருகிறார்கள். அதனால் இந்தியாவையே, நேசித்து வருகிறார்கள்" என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துன் மகாதீரின்அவரின் இதுபோன்ற இனத்துவேசக் கருத்துக்கள்-ஒன்றுபட்ட மலேசியர்களை ஒருமுகப்படுத்த பெருந் தடையாகயிருப்பதுடன், அது, அரசியலமைப்புக்கு முற்றிலும்முரணாகவும் இருக்கிறது. அதனால் இது,போலீஸ் தலைவரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரவேண்டியே இந்த பரிந்துரைப்புகாரை- 50- க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் பேராதரவோடு ஞாயிறன்று வழங்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்வில் இயக்க உறுப்பினர்களோடு, ஆதரவாளர்களும் பெருமளவு பங்கேற்று ஆதரவை வழங்குமாறு முனைவர்- பெரு.அ.தமிழ்மணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்