Oct 2, 2026
Thisaigal NewsYouTube

குறைந்தபட்ச ஊதியம்: தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் சிறு வணிகங்களுக்கு ஆதரவும் தேவை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குறைந்தபட்ச ஊதியம்: தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் சிறு வணிகங்களுக்கு ஆதரவும் தேவை

குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதில் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேவேளை, சிறு வணிகங்கள் சிறந்த ஊதியத்தை வழங்குவதற்கு தேவையான ஆதரவையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கெஅடிலான் கட்சியின் கூட்டரசு பிரதேச தலைமைத்துவ மன்றத்தின் வியூக இயக்குநர் ஜோனாதன் வேலா தெரிவித்துள்ளார்.

புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தற்போதைக்கு விலக்கு அளித்துள்ள அமைச்சரவையின் முடிவு, அந்தத் துறைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்குவதாக அவர் கூறினார்.

அதேவேளை, தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜோனாதன் வேலா, சிறு வணிகங்களும் சிறந்த ஊதியம் வழங்கும் திறனைப் பெறுவதற்கு உற்பத்தித்திறன் அதிகரிப்பு, தொழிலாளர் பயிற்சி, இலக்கமயமாக்கல் மற்றும் பொருத்தமான வணிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், ஊதியக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் முன் தொழிலாளர்கள், உணவகங்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் சேவைத் துறையினரின் கள அனுபவங்களையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
குறைந்தபட்ச ஊதியம்: தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் சிறு வண... | Thisaigal News