Oct 1, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலை மேலும் குறைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலை மேலும் குறைந்துள்ளது

கோலாலம்பூர், டிசம்பர்.24-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் அதன் விலை மேலும் குறைந்துள்ளது. மானியமற்ற பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 6 சென் குறைந்து, 2 ரிங்கிட் 56 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 8 சென் குறைந்து 3 ரிங்கிட் 16 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 8 சென் குறைந்து, 2 ரிங்கிட் 94 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 விலை, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →