Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சாரா உதவித் திட்டம்: 5 ஆவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது
தற்போதைய செய்திகள்

சாரா உதவித் திட்டம்: 5 ஆவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

சாரா உதவித் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட் வரை மதிப்பிலான பொருட்கள் மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மைகாட் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 100 ரிங்கிட் சாரா உதவித் தொகையின் மூலம் நேற்று வியாழக்கிழமை மட்டும் இரவு 9.30 மணி வரை, 17 லட்சம் பேர், தங்களுக்கான தொகையில் பொருட்களை வாங்கியுள்ளனர்.

மைகாசே செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், எந்த சிக்கலையும் எதிர்நோக்கவில்லை. 99.5 விழுக்காடு வரை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய சாரா உதவித் திட்டத்தில் தகுதி பெற்ற 22 மில்லியன் மக்களில் இதுவரை 6.6 லட்சம் பேர் அல்லது 30 விழுக்காட்டினர் தங்களுக்கான பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர் என்று நிதி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

Related News