May 24, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்த டிரெய்லர் லோரி, மேலும் ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்த டிரெய்லர் லோரி, மேலும் ஒருவர் மரணம்

Share:

குவந்தான்,ஆகஸ்ட் 03-

டிரெய்லர் லாரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு வீட்டை மோதி தள்ளிய சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்துடன் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

ஆகக்கடைசியாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் Mohd Waldon Faris Nasruddin என்ற 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி Pekan மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இன்று சனிக்கிழமை காலை 4.46 மணியளவில் குவந்தான், Pekan, Kampung Ketapang Hilir என்ற இடத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் 32 வயது Nurnazatul Fasiha Nasruddin என்ற மாது இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நிகழும் போது வீட்டில் இருந்த ஐவரில் இருவர் உயிர்தப்பிய வேளையில் மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் ஒருவரான 25 வயது ஆடவர் இன்று பிற்பகலில் உயிரிழந்தார்.

Related News