Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நவம்பர் 29 ஆம் தேதி திஆரெக்ஸ் திறக்கப்படும்

Share:

கோலாலம்பூர் மாநகரில் மையப்பகுதியில் நில அடையாளமாக வீற்றிருக்கும் திஆரெக்ஸ் எனப்படும் துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை, வரும் நவம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்ஸென்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட அந்த நிலத்தடி சுரங்கப்பாதை, கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை சுமார் 30 விழுக்காடு குறைக்க வல்லதாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வாகனமோட்டிகள் கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையாமலேயே தங்களின் இலக்கை வெகுவிரைவில் சென்றடைவதற்கு துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை பெரும் துணை புரியும் என்று அலெக்ஸென்டர் நந்தா லிங்கி நம்பிக்கை தெரிவித்தார்.

துன் ராசாக் எக்ஸ்செஞ் நிலத்தடி சுரங்கப்பாதை, ஜாலான் துன் ராசாக் மற்றும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஆகியவற்றுடன் நேரடிப் பாதையை கொண்டுள்ளது. ஒரு வளைவான பாதையை கடப்பது மூலம் மிக எளிதில் திஆரெக்ஸ் மேம்பாட்டுப் பகுதியை சென்றடையவும், அங்கிருந்து வெளியேறவும் மு டியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!