கோலாலம்பூர், அக்டோபர்.01-
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள், அடியோடு ஒழிக்கப்படுவார்கள் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர்கள் முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வரை, யாராக இருந்தாலும், தவறு செய்திருந்தால், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்நடவடிக்கைக்காக தேசிய காவல்துறை மற்றும் பிற அமலாக்கத் துறைகளை வலுப்படுத்தவும் தான் தயாராக இருப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்நடவடிக்கைகளில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் முதலில் குறி வைக்கப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் சிறிய அளவில் தவறுகள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊழலுக்கு எதிரான கருத்தரங்கு ஒன்றில் அன்வார் தெரிவித்துள்ளார்.








