சுமார் ஆறு லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் முறை அதிகாரி உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
39 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடை அந்த மூன்று ஆடவர்களும், நேற்று இரவு 8 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு சாட்சியம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் இயந்திரம் மற்றும் மின்சார அமைப்புகளை மேம்படுத்தும் குத்தகையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்திற்கு தென்டர் பெற உதவியதற்காக, அந்த அதிகாரி 6 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பிடிபட்ட நபர்கள் 2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அதன் தகவல்கள் கூறுகின்றன.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


