Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தமிழ் மொழி விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் சாழ்த்து பாடலுக்குத் தடை விதிப்பதா ? - பினாங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் !
தற்போதைய செய்திகள்

தமிழ் மொழி விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் சாழ்த்து பாடலுக்குத் தடை விதிப்பதா ? - பினாங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் !

Share:

நேற்று பினாங்கு கெப்பாளா பாத்தாசில் உள்ள ஒரு விடுதியில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த 2023 தேசிய நிலையிலான வளர்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து பாடல்களுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து பொனாங்கு மாநிலஆட்சிக் குழு உறுப்பினர் சுன்டரஜு சொமூ வும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிரிஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்உம் உடனடியாகத் தலையிட வேண்டும் என இன்று இருவரு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

எந்த நிகழ்சியைத் தொடங்கும் முன்னர், கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடப்படுவது தமிழர்கள் காலம் காலமாக தங்களின் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பல்லின மக்களைக் கொண்டுள்ள மலேசியத் திருநாட்டில் அனைத்து இனங்களும் தங்களின் சமயம், மொழி, பண்பாட்டைக் கடைபிடிக்க மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் வழி வகை செய்கிறது.

அவ்விரு பாடல்களுக்கும் அமைச்சின் அதிகாரப்பூர்வ - மொழி சார்ந்த நிகழ்ச்சியில் தடை விதிப்பது மக்களிடையே வீண் பிரச்சனையைக் கிளப்புவது போல் உள்ளது என பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிஅப்பு செயற்குழுவின் தலைவர் சுந்தராஜூவும் துணைத் தலைவர் குமரன் கிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்.

வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பிரதமரும் கல்வி அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், உலகப் பொது மறை தந்த திருவள்ளுவரின் உருவம் கொண்ட பதாகைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததையும் அவ்விருவரும் குறிப்பிட்டனர்.

இந்தத் தடைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்படும் தேசிய நிலையிலான மொழி நிகழ்ச்சியில் இவ்வாறானத் தடைகள் விதிக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்விவகாரம் குறித்து பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு செயற்குழு அம்மாநில கல்வித் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்