Oct 15, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்

Desa Setapakக்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் , கிறிஸ்தவ போதனைகளைப் பரப்ப முயன்றதாகக் கூறப்படும் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மலேசியா வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் Azry Akmar Ayob செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் ஆவல் துறையினர் தேடி வருகின்றனர்.

டிசம்பர் 30ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான காணொலியில் சிலர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது பதிவாகியுள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து துண்டு பிரசுரம் விநியோகித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல... | Thisaigal News