கோல சிலாங்கூர், நவம்பர்,10-
மேற்கு கரையோர விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் வீட்டுடைப்புக்கு ஆளாகியுள்ள சிலாங்கூர், கம்போங் ஜாவாவைச் சேர்ந்த 19 குடும்பங்களுடன், இழப்பீடு தொடர்பாக இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்த 19 குடும்பங்களும் வீடுகளைக் காலி செய்ய வேண்டும். அதற்கு ஏதவாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
அவர்களுக்கான இழப்பீடு தொடர்பாக ஏற்கனவே நடுவர் மன்றம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் நடுவர் மன்றத்தை நாடாமல் நீதிமன்ற நடவடிக்கையைக் கையாண்டார்கள் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.








