சிரம்பான், நவம்பர்.22-
சிரம்பான், கெமாயான் ஸ்குவேரில்ச்ப் உள்ள ஓர் உணவகத்தின் முன்புறம், வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமுற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கைகலப்பு தொர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இரண்டு நபர்கள் ஒருவரைக் கீழே தள்ளித் தலைக்கவசத்தினால் தாக்குவதையும், பின்னர் அந்த நபர் சுயநினைவு இழந்த நிலையில் தரையில் கிடப்பதையும் அந்த காணொளி சித்திரிக்கிறது.
வாய்ச் சண்டை நிகழ்ந்து கொண்டிந்த போது, காயமுற்ற நபர், இரும்பினால் கார் கண்ணாடியை உடைத்ததைத் தொடர்ந்து, இது கைகலப்பாக மாறியது. அந்த நபரைத் தாக்கிய இரு நபர்கள், பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் நள்ளிரவு 12.39 மணியளவில் மாது ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார். தனது காதலனை இரடு நபர்கள் தலைக்கவசத்தினால் தாக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸஹார் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.








