Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குடியிருப்புச் சொத்துக்களுக்கு விற்பனை, சேவை வரி விலக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடியிருப்புச் சொத்துக்களுக்கு விற்பனை, சேவை வரி விலக்கு

புத்ராஜெயா, ஜூன்.15-

வீட்டு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் விற்கப்படும் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விற்பனை, சேவை வரி விலக்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது வீட்டுவசதி, ஊராட்சி அமைச்சு. குடியிருப்புப் பயன்பாட்டிற்கான அனைத்து குடியிருப்புக் கட்டடங்களும், வணிக உரிமையின் கீழ் உள்ள செர்விஸ் அபார்ட்மெண்ட் உட்பட, அவ்வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

அடுக்கு வரி பிரச்சினை வணிகங்களுக்கு இடையிலான விலக்கு மூலம் தீர்க்கப்படுகிறது, இது சேவை வரிகள் ஒரே ஒரு மட்டத்தில் மட்டுமே விதிக்கப்படுவதை உறுதிச் செய்கிறது. மேலும், சிமென்ட், சரளை, மணல் போன்ற அடிப்படைக் கட்டுமானப் பொருட்களுக்கு சுழியம் விழுக்காடு விற்பனை வரி தொடர்ந்து பொருந்தும் என ங்கா கோர் மிங் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →