Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவி பாலியல் பலாத்காரம்: அந்த 4 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்
தற்போதைய செய்திகள்

மாணவி பாலியல் பலாத்காரம்: அந்த 4 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்

Share:

மலாக்கா, அக்டோபர்.13-

மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மூன்றாம் படிவ மாணவி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் ஐந்தாம் படிவத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று காலையில் கல்வி அமைச்சில் நடத்தப்பட்ட பள்ளி கட்டொழுங்கு வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மலாக்கா போலீசார், நான்கு மாணவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கதி குறித்து, பள்ளியின் வகுப்பாசியரிடம் தெரிவித்த பின்னர் அந்த மாணவியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மாணவர்களைக் கல்வி அமைச்சு தற்காக்காது என்று கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் தெரிவித்திருந்தார்.

Related News