May 5, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் 'மலேசியா கார்னிவல் 2026': மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2026-க்கான சிறப்பு நாட்காட்டி வெளியீடு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் 'மலேசியா கார்னிவல் 2026': மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2026-க்கான சிறப்பு நாட்காட்டி வெளியீடு

Share:

சிங்கப்பூர், பிப்ரவரி.02-

சிங்கப்பூரின் Suntec கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 'மலேசியா கார்னிவல் 2026'-இல், 'மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2026' பிரச்சாரத்திற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வு நாட்காட்டியை மலேசியச் சுற்றுலாத் துறை வெளியிட்டது.

சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் Dato’ Indera Dr. Azfar Mohamad Mustafar, இதனைத் தொடங்கி வைத்தார். இந்த நாட்காட்டியில் 300-க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த விழாக்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று நாள் கண்காட்சியில் மலேசிய உணவு வகைகள், ஹோட்டல்கள் மற்றும் பிரத்யேக சுற்றுலா தொகுப்புகளான Travel Packages சிங்கப்பூர் பயணிகளுக்காகச் சிறப்புத் தள்ளுபடி விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

2025-ஆம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூரிலிருந்து 21.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை தந்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 11.8 விழுக்காடு வளர்ச்சியாகும். சிங்கப்பூர் எப்போதுமே மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாப் பங்காளியாக விளங்குவதால், , 'மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2026' பிரச்சாரத்தின் கீழ் நிலையான மற்றும் நவீன சுற்றுலா அனுபவங்களை வழங்க மலேசியா தயாராகி வருகிறது. இந்த இலக்கை அடைய 96 டிராவல், EU ஹாலிடேஸ் உள்ளிட்ட ஆறு முன்னணி சிங்கப்பூர் பயண முகவர்களுடன் இணைந்து மலேசியச் சுற்றுலாத் துறை பணியாற்றி வருகிறது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்