Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பணம் பறிக்கும் முயற்சியை முன்னாள் இஸ்ஸ்பெக்டர் ஷீலா கண்டித்தார்
தற்போதைய செய்திகள்

பணம் பறிக்கும் முயற்சியை முன்னாள் இஸ்ஸ்பெக்டர் ஷீலா கண்டித்தார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.08-

லைசென்ஸின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பாகிஸ்தான் ஆடவரை மடக்கி, விசாரணை நடத்தப்பட்ட போது, போலீஸ்காரர்களின் பணியில் முன்னாள் இஸ்ஸ்பெக்டர் ஷீலா தலையிட்டதாகக் கூறப்படுவதை அவரின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் இன்று மறுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்தின் முன்புறம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரை மிரட்டி, பணம் பறிக்கும் முயற்சி நடத்ததாகவும், அப்போது சம்பவ இடத்தில் இருந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷீலா, போலீஸ்காரர்களின் அந்த நடவடிக்கையைக் கண்டித்ததாகவும் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.

போலீஸ்காரர்களின் பணியில் ஷீலா தலையிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அந்நிய ஆடவரை மடக்கி, தன் கண் எதிரே நடந்த பணம் பறிக்கும் முற்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல் அதனை அவர் கண்டித்தார் என மனோகரன் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஷீலாவின் செயல் தொடர்பான காணொளி ஒன்று வைரலாகியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் மனோகரன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News