பள்ளி புதிய பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களின் நடப்புத் தேவைக்கு பொருந்தி வராத மிக சுமையான மற்றும் கடுமையான துணை தலைப்புகளை உள்ளடக்கிய பாடமுறைகள், இந்த புதிய பாடத்திட்டத்தின் வாயிலாக மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கான பள்ளி பாடத்திட்டம் அமலாக்கத்தின் ஆய்வின் வாயிலாக கல்வி நலன் சார்ந்த பொது மக்கள், கல்வி ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் நிபுணர்களின் வாயிலாக கருத்துகள் கேட்டறியப்பட்டு, இந்த புதிய பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டுடள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தை வரைவது தொடர்பாக 21 ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பெருந்தகைகள், விரிவுரையாளர்கள், பெற்றோர் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1,600 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தவிர, நாட்டில் அடுத்த 5 ஆண்டு காலகட்டத்திற்கு கையாளப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நேக்கில் பொது மக்களின் கருத்துகளும் கண்டறியப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துகளை KurikulumKita2027 அகப்பக்கத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


