Jan 9, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் போலீஸ் தலைவருக்கு மிரட்டல் விடுத்த நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கிளந்தான் போலீஸ் தலைவருக்கு மிரட்டல் விடுத்த நால்வர் கைது

Share:

கோத்தா பாரு, ஜனவரி.08-

கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமட் யுசோஃப் மாமாட்டிற்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அந்த நால்வரும், தற்போது குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் தடுத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

ஆலோங் எனப்படும் வட்டி முதலைகளின் தூண்டதலின் பேரில் அந்த நால்வரும் இந்த மிரட்டலை விடுத்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News