குவாந்தான், டிசம்பர்.18-
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி 10,740 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சுமார் 3,477 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 77 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குவாந்தானில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகபட்சமாக 8,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாரான் (Maran), பெக்கான் (Pekan), ரொம்பின் (Rompin) மற்றும் ஜெராண்டுட் (Jerantut) ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.








