Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்
தற்போதைய செய்திகள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

Share:

அமெரிக்க விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக, 54 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் படி, நான்கு விண்வெளி வீரர்களுடன், மலேசிய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில், SLS ராக்கெட்டானது சீறிப் பாய்ந்தது.

இந்த பிரம்மாண்டமான எஸ்.எல்.எஸ் ராக்கெட்டில் உள்ள ஓரியன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த விண்வெளிப் பயணத்தில் ஒரு பெண் மற்றும் கறுப்பின வம்சாவளியைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

Related News