காப்பார், jalan raja mokhtar ரில் கடந்த புதன்கிழமை பல் பொருள் விற்பனை கடை ஒன்றில், பாராங்கை ஆயுதமாக கொண்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு ஆடவர்களை போலீஸ் தேடி வருவதாக வடக்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP S. vijaya rao தெரிவித்தார்.
இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பணப்பெட்டியை அக்கொள்ளையர்கள் களவாடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாரவை சோதனை செய்த போது, அவ்விரு கொள்ளையர்களும் தலைக்கவசத்தை அணிந்திருந்தனர் என்பதுடன், பணப்பெட்டியுடன் modenas dynamic ரக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் vijaya rao தெரிவித்தார்.
இதில் 2 ஆயிரம் வெள்ளி ரொக்கம் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.








