Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கின

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கின

சிப்பாங், நவ. 29-


நேற்று இரவு தொடங்கி, தொடர்ந்து கொட்டித் தீர்த்து வரும் அடைமழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள வேளையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வாகனமோட்டிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியது.

சைபர் ஜெயாவிலிருந்து சிப்பாங், கே.எல்.ஐ.ஏ. விமான நிலையம் மற்றும் பண்டார் பாரு சாலாக் திங்கியை நோக்கிச்செல்லும் முதன்மை பாதையின் சமிக்ஞை விளக்குப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, நீர் கரைபுரண்டோடியதால் பல வாகனங்கள், நீரில் சிக்கி, இயந்திர செயலிழப்புக்கு இலக்காகின.

இதனைத் தொடர்ந்த வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு, கோத்தா வாரிசானிலிருந்து KLIA மற்றும் பண்டார் பாரு சாலாக் திங்கியை நோக்கி செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதை சிப்பாங் மாவட்ட போக்குவரத்து போலீஸ் துறை அறிவித்துள்ளது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →