Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வணிகர் 11 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வணிகர் 11 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

ஜோகூர் பாரு, ஜூன்.24-

ஓன் லைன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகக் கூறி, ஆசை வார்த்தைகளை நம்பிய வணிகர் ஒருவர், 11 லட்சம் ரிங்கிட்டை இழந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி, அந்த வணிகர், பெரிய தொகையைச் செலவிட்டுள்ளார். இறுதியில் அவருக்கு ஏமாற்றம் மற்றும் மோசடியே மிஞ்சியதாக நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்து இருப்பதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

25 விழுக்காடு கமிஷன் கொடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அந்த வணிகர் நம்பியுள்ளார்.

உண்மையிலே அப்படியொரு வேலை வாய்ப்பு இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →