Sep 29, 2026
Thisaigal NewsYouTube
1,500 மியன்மார் நாட்டவர்கள் இன்று நாடு கடத்தல் – மலேசியா நடவடிக்கை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

1,500 மியன்மார் நாட்டவர்கள் இன்று நாடு கடத்தல் – மலேசியா நடவடிக்கை தொடக்கம்

Share:

மலேசியாவில் தடுப்பு முகாம்களில் இருந்த சுமார் 1,500 மியன்மார் நாட்டவர்களை இன்று அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கியது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக மொத்தம் 5,000 மியன்மார் நாட்டவர்கள் “தன்னார்வமாக” நாடு திரும்ப ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பல பேருந்துகள் லுமூட் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள மஜ்லிஸ் பெர்பண்டாரான் மஞ்சோங் மைதானத்திற்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அங்கு அவர்களுக்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், அருகிலுள்ள கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கப்பல் மூலம் மியன்மாருக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மலேசியாவின் இந்த நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

எனினும், கடந்த ஜூலை மாதம், 5,000 அகதிகளை மீண்டும் ஏற்றுக் கொள்ள மியன்மார் ஒப்புக் கொண்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News