Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சலவை இயந்திரத்திற்குள் மெத்தையை திணித்த இருவர்
தற்போதைய செய்திகள்

சலவை இயந்திரத்திற்குள் மெத்தையை திணித்த இருவர்

Share:

பொது மக்களின் வசதிக்காக ஆங்கா​ங்குள சுயசேவை சலவை இயந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் பயன்பாட்டை விளக்கும் வ​ழிகாட்டி முறைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுயசேவை சலவை இயந்திரங்களின் ​மூலம் மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சலவை சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சலவை இயந்திரத்திற்குள் ஒரு ஆள் பயன்பாட்டிற்குரிய படுக்கை மெத்தைகளை , அவற்றை சலவை செய்து, உலரவைக்க முயற்சியில் ஈடுபட்ட ஒரு தம்பதியரின் செயலுக்கு பொது மக்கள் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவில் எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் அது உள்ளூரில் நிகழ்ந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த ​தம்பதிய​ரின் செயல் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போது, அறிவுக்கு எட்டாத வேலைகளை செய்துள்ள அத்தம்பதியருக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

 சலுவை இயந்திரத்திற்குள் பெரிய அளவிலான மெத்தை, நுழையாது என்பது நன்கு தெரிந்திருந்தும், மெத்தையை மடக்கி அழுத்தி, சுருட்டி, அவற்றை இயந்திரத்திற்குள் ​திணிப்பதற்கு அந்த ஆணும், பெண்ணும் வெகு நேரமாக எடுத்துக்கொண்ட சிரத்தை, அவர்களின் பொறுப்பற்ற செயலை காட்டுவதாக உள்ளது என்று பலர் த​ங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

Related News