வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று,சாலையைவிட்டு விலகி, மரத்தில் மோதி தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங், ஜாலான் பெக்கெலிலிங் தொழிற்பேட்டைப்பகுதியில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாசிர் கூடாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பத்து வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தி, அந்த நிசான் அல்மேரா காரை சோதனை செய்த போது காரின் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் கருகி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தளபதி சர்ஹான் அக்மல் முகமது தெரிவித்தார்.
மீட்புப்பணிக்கு பின்னர் விசாரணைக்கு ஏதுவாக சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








