Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்

புத்ராஜெயா, ஜூன்.18-

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்து வரும் வேளையில் ஈரானில் உள்ள மலேசியர்கள், வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கல்வி பயின்று வருகின்றவர்கள், சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் , மலேசியாவைப் பிரதிநிதித்து அலுவல் பயணங்களை மேற்கொண்டவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொள்ளும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →