கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
இளையோர்களிடையே கட்டொழுங்கை ஏற்படுத்தவும், நாட்டுப்பற்றை விதைக்கவும் வகை செய்யும் தேசிய சேவை பயிற்சித் திட்டமான பிஎல்கேஎன் 3.0வை ரத்து செய்யுமாறு முன் வைக்கப்பட்டுள்ளப் பரிந்துரையை அரசியலாக்க வேண்டாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் கேட்டுக் கொண்டார்.
நாட்டை வழி நடத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் எதிர்காலத்தில் கட்டொழுங்கு மிக்க இளைய தலைமுறையினர் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பிஎல்கேஎன் பயிற்சித் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தி வருவதாக அமைச்சர் விளக்கினார்.
நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விவகாரமாக இருப்பதால் இதனை அரசியலாக்க வேண்டாம் என்று காலிட் நோர்டின் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.








