Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வங்கி கணக்கை இரவல் தந்ததாக மாது மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வங்கி கணக்கை இரவல் தந்ததாக மாது மீது குற்றச்சாட்டு

Share:

பாலிக் பூலாவ், டிச. 26-


பிறர் தனது வங்கிக்கணக்கை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கு வங்கி ஏடிஎம் கார்ட்டை இரவல் தந்ததாக மாது ஒருவர் பினாங்கு, பாலிக் பூலாவ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வாளரான 44 வயது கே. கலைவாணி என்ற மாது, பேரா, செம்மோரைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு தனது வங்கி கணக்கின் ஏ.டி.எம். கார்ட்டை, கூரியர் வழி அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த கலைவாணி, மற்றொரு பெண்மணிக்கு 750 ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவில் தனது ஏடிஎம். வங்கிக் கார்ட்டை இரவல் தந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடநத் டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் 12.42 மணியளவில் பினாங்க, பாயான் லொப்பாஸ், கெர்த்தாங் சங்குல் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை கலைவாணி புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது..

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்ம் அல்லது 7 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கலைவாணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News