Dec 17, 2025
Thisaigal NewsYouTube
டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கொலை வழக்கு விசாரணையாக மறுவகைப்படுத்தியிருக்கும் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவை பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் வரவேற்றுள்ளன.

பாராங்கினால் தங்களைத் தாக்க வந்ததால் போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள மூவரையும் சுட்டுக் கொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக மலாக்கா போலீசார் வாதிட்டாலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு சட்டத்துறை அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சட்டத்துறை அலுவலகத்தின் இந்த முடிவு, பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.

மலாக்கா போலீசார் மூவரையும் திட்டமிட்டு கொன்றுள்ளனர் என்பதற்குக் கொலை விசாரணையை ஆதரிக்கும் அதிகமான ஆதாரங்கள் தங்களிடம் உண்டு என்பதைத் தாங்கள் தொடக்கத்திலிருந்து வாதிட்டு வந்ததாக ராஜேஸ் தெரிவித்தார்.

இதில் முக்கியமான ஆதாரம், அந்த மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, மலாக்கா போலீசார் புரிந்த அராஜகச் செயல் தொடர்பான ஆடியோ பதிவு மற்றும் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிருபிப்பதாக உள்ளன என்று ராஜேஸ் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டு இருப்பதால் இதில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் அனைவரும் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்யப்ட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் பொதுமக்களின் நம்பகத்தன்மைக்கு எதிராகச் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தி, கத்தியையும், பொய்யான அறிக்கையையும் வெளியிட்டு, போலீசார் நடத்திய அராஜகத்தை மூடி மறைக்க முயற்சித்த மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் முதல் சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜேஸ் வலியுறுத்தினார்.

Related News

எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்:  முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் சம்பவத்தை கொலையாக வகைப்படுத்தப்பட்டதை ப... | Thisaigal News