ஜூலை 21-
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 2024 ஜூன் மாதம் வரை IS தீவிரவாத கும்பலின் செயல்களுக்கு ஆதரவு வழங்கி வந்த பொது பல்கலைகழக்கத்தைச் சேர்ந்த 70 வயது முன்னாள் விரிவுரையாளர் Abdullah Daud ஜொகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தீவிரவாத சிந்தனையை பரப்புதல் மட்டுமின்றி தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நிமித்தமாக, Kampung Melayu Kangkar Tebrauவில் அமைந்துள்ள தனது வீட்டை பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், IS தீவிரவாதம் தொடர்பான Hakikat Dienul Islam மற்றும் Tarbiyah Jihadiyah எனும் இரண்டு நூல்கள் மற்றும் தீவிரவாதம் தொடர்பான இரண்டு காணொளிகள் அவர் வீட்டில் கண்டெக்கப்பட்டுள்ளாது என போலீசார் உறுதி செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளரின் குற்றம் நிருபணமானல் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அரசு தரவு வழக்கறிஞர் தெரிவித்தார்.








