Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சைத்தோ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
தற்போதைய செய்திகள்

சைத்தோ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Share:

டாமன்சாரா, செராஸ் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளில் தனது கல்வி வளாகங்களை கொண்டுள்ள சைத்தோ பல்கலைக்கழக கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிள்ளான், விந்தம் அக்மார் ஹோட்டல் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

சட்ட ஒழுங்கு முறை, வர்த்தகம் மற்றும் வடிவமைப்பு ஆகிய மூன்று துறைகளில் 650 மாணவர்கள் பட்டம் பெற்றனர். சைத்தோ பல்கலைக்கழக கல்லூரியின் வேந்தர் டத்தோ டாக்டர் முஸ்தப்பா பின் அப்துல் ஹமிட் தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களில் 111 பேர் இந்தியர்கள் ஆவர்.

இந்திய மாணவர்களில் பலர் வர்த்தகத்துறை மற்றும் வடிவமைப்புத்துறையில் சிறப்பு விருதும் பெற்றனர். தவிர முதுகலையில் 14 மாணவர்கள் முதல் முறையாக பட்டம் பெற்றனர். விரும்பியத் துறையில் பட்டம் பெற்று, ஒரு பட்டதாரியாக உயர்ந்து இருப்பது, கல்வி வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற தங்களின் லட்சியம் இன்று நிறைவேறியிருப்பதாக சைத்தோ பல்கலைக்கழக கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சைத்தோ பல்கலைக்கழக கல்லூரியின் தலைமை செயல்முறை அதிகாரி ஓய் சீ கோக், துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் வினிதா, உதவி துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஆர்.குலந்தசாமி, தலைமை செயலாக்க அதிகாரி ஹொங் விங் ஒன் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News