புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.11-
சமையல் கட்டில் எரிவாயு கலன் வெடித்த சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தீக்காயங்களுக்கு ஆனானார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், தாமான் அல்மா, லெபுராயா முஹிபா என்ற இடத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது என்று பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
எரிவாயு கலன் குழாயில் ஏற்பட்ட துவாரத்தின் காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமையல் கட்டுப் பகுதியில் நாலாபுறமும் சிதறிய வேளையில் காயமுற்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட காயங்கள், முதல்படி நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








