Dec 4, 2025
Thisaigal NewsYouTube
திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை
தற்போதைய செய்திகள்

திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை

Share:

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.29-

அடுத்த 1 மணி நேரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட செய்தி கெடா சுங்கை பட்டாணி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

இது குறித்து கோல மூடா தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் கூறுகையில், “28 வயதான அந்த இளைஞரின் உடலை சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கைப்பற்றினோம். நேற்று ஆகஸ்ட் 28-ம் தேதி, மாலை 6.18 மணியளவில் அந்த இளைஞர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “அந்த இளைஞருக்கு நேற்று ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு 7 மணியளவில் கோல கெட்டிலில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது இச்சம்பவத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணை முடியும் வரை இச்சம்பவம் குறித்து வேறு எந்தத் தகவலும் வெளியிட முடியாது” என்றும் ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த இளைஞரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News