Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்

Share:

தற்போது நிலவி வரும் கடும் வெப்ப நிலையினாலும், மழையின்மை காரணத்தினாலும், பினாங்கு, ஆயர் ஹீதாம் அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் குறைந்துக்கொண்டே வருவதாகவும், அதில் உள்ள நீர் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றும் மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுவரும் வேளையில், போதிய மழை பெய்யாவிட்டால், வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த அணைக்கட்டில் உள்ள நீர் வற்றிவிடும் என்று Zairil Khir குறிப்பிட்டார்.


இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதே வேளையில், எதிர்காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் அதனை சேமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News