கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
கோலாலம்பூர் மாநகரில் நாளை சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணியை காஸா மனிதநேயச் செயலகம், மலேசிய உலாமா மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மக்கள் மஸ்ஜிட் நெகாரா, மஸ்ஜிட் ஜாமெக் சுல்தான் அப்துல் சமாட் மற்றும் சோகோ பேரங்காடி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது அமைதிக்கு குந்தகம் அல்லது ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துறை எச்சரித்துள்ளது.








