Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கார், லோரியில் மோதியது இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கார், லோரியில் மோதியது இருவர் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.20-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, லோரியுடன் மோதியதில் இ-ஹெய்லிங் ஓட்டுநரும், அவரின் காரில் பயணம் செய்த சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் உயிரிழந்தனர்.

இன்று காலை 11.20 மணியளவில் சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் கார், ஸ்கூடாயிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 48 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநரும், 27 வயது சிங்கப்பூர் ஆடவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். இருவரின் சடங்களையும் இடிபாடுகளிலிருந்து மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் விளக்கினார்.

Related News