May 24, 2026
Thisaigal NewsYouTube
பந்தை டாலம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் விஜயலெட்சுமியின் உடல் தேடும் பணி தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பந்தை டாலம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் விஜயலெட்சுமியின் உடல் தேடும் பணி தொடங்கியது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25

கோலாலம்பூர் மாநகரில் பாதாள சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு,, சாக்கடை கழிவு நீரை கொண்டு வந்து சேர்க்கும் ஆகக்கடைசி மையப்புள்ளியாக கருதப்படும் மாநகரின் மிகப்பெரிய கழிவு நீர் சுத்திரிப்பு மையான பந்தை டாலம் –மில் இந்தியப் பிரஜை விஜயலெட்சுமியின் உடலை தேடும் பணி இன்று தொடங்கியது. .

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பாதை இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதாள சாக்கடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஓர் இந்தியப்பிரஜையான விஜயலெட்சுமியின் உடலை தேடி கண்டு பிடிக்கும் ஆகக்கடைசி முயற்சியாக பந்தை டாலம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தீயணைப்பு, மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

கோலாலம்பூர் மாநகரின் முதன்மை கழிவு நீர் சுத்திகரிப்பு மையமான பந்தை டாலம் கழிவு நீர் சுத்திகரிப்பு மைய வளாகத்திற்குள் நுழைய செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் அதிகமான தீயணைப்பு வண்டிகளும், பொது தற்காப்பு வண்டிகளும் காலை முதல் காணப்பட்டுள்ளன. மாநகரில் கழிவு நீர் அகற்றும் பிரதான நிறுவனமான Indah Water Konsortium- மிற்கு சொந்தமான பந்தை டாலம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் அந்த மாதுவின் உடலை தேடுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷெரீப் தெரிவித்தார்.

விஜயலெட்சுமியை தேடும் பணி, மஸ்ஜிட் இந்தியா அருகில் உள்ள Agro Bank அருகில் உள்ள பாதாள சாக்கடைகளில் குறி வைக்கப்பட்டு, தேடும் பணி நடைபெற்ற போதிலும் பந்தை டாலம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலும் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News