Dec 9, 2025
Thisaigal NewsYouTube
பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் நஸ்ருடின் மீது ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் நஸ்ருடின் மீது ஊழல் குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.08-

கெடா மாநில அரசுக்குச் சொந்தமான மாடு வளர்ப்புக் கூட்டுத் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறி, பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் நஸ்ருடின் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

அமார் அஸ்சுவாட் அபு பாக்கார் என்ற நபருடன் சேர்ந்து, அஸ்மான் நஸ்ருடின், இக்குற்றத்தைப் புரிந்ததாக, நீதிபதி நாசீர் நோர்டின் முன்னிலையில் குற்றச்சாட்டானது வாசிக்கப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அஸ்மான் நஸ்ருடின் விசாரணை கோரினார்.

கெடாவில் மாடு வளர்ப்புத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தைப் பெற்றுத் தருவதற்காக, ஹஸ்ஸாநாயிம் ஃபௌஸி என்ற வர்த்தகரிடம் 4 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறி, அஸ்மான் நஸ்ருடினை கடந்த வாரம் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம், பிரிவு 28(1)-ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டானது நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது லஞ்சம் பெற்றத் தொகையில் 5 மடங்கோ அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படலாம்.

Related News