Mar 13, 2026
Thisaigal NewsYouTube
உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு
தற்போதைய செய்திகள்

உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

17 வயது பையனின் மைக்காட் விண்ணப்பத்தைத் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஏற்றுக் கொண்டதையடுத்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு எதிராகத் தொடரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிடுவதாக லிபெர்டி வழக்கறிஞர்கள் அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன் இன்று அறிவித்துள்ளார்.

அந்தப் பையனை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து, அவருக்கு 30 நாட்களுக்குள் மைகாட் வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், ஆரம்பத்தில் ஜேபிஎன் அதிகாரிகள் மைகாட் வழங்க மறுத்து, 24 வகையான தேவையற்ற விண்ணப்பப் படிவங்களைச் பையனிடம் வழங்கியதாக சுரேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இது "அதிகாரத்துவ பைத்தியக்காரத்தனம்" என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

அந்தப் பையனின் விண்ணப்பத்தை ஏற்க ஜேபிஎன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால், உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர்கள் எச்சரித்திருந்தனர்.

இன்று காலை அந்தப் பையன், புத்ராஜெயாவில் உள்ள ஜேபிஎன் தலைமையகத்திற்குச் சென்ற போது, அதிகாரிகள் அவரது மைகாட் விண்ணப்பத்தை முறைப்படி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து, அமைச்சருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதில்லை என்று சுரேந்திரன் உறுதிப்படுத்தினார்.

17 வயதுடைய அந்த பையன், கடந்த மாதம் எஸ்பிஎம் தேர்வை எழுதி முடித்த ஒரு மாணவர் ஆவார். இவர் தனித்து வாழும் தனது தாயுடன் வசித்து வருகிறார். பையனின் அசல் பிறப்புச் சான்றிதழ் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறி, ஜேபிஎன், அவருக்கு மைகாட் வழங்க நீண்ட காலமாக மறுத்து வந்தது. எனினும், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவரை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து தீர்ப்பளித்தது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்